search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து விபரங்கள்"

    • அசையும், அசையா சொத்து விபரங்களை முழுமையாக, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.
    • 10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற விபரம் கேட்கப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க, கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து, அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:- அசையும், அசையா சொத்து விபரங்களை முழுமையாக, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர். அதற்கான காரணங்கள் ஏதும் தெளிவாக கூறவில்லை. கருவூலத்துறையில் இதற்கான பிரத்யேக படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அந்தந்த கல்லூரி முதல்வர்கள், மண்டல கல்லரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற விபரம் கேட்கப்பட்டது. அதன் பின் இவ்விபரங்கள் கேட்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    கேரளாவில் முதல்வர் மற்றும் அனைத்து மந்திரிகளின் அனைத்து சொத்து விபரங்களையும் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் அரசு இணையதளத்தில் வெளியிட அம்மாநில கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்த கேபினட் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், முதல்வர் மற்றும் அனைத்து மந்திரிகளின் முழு சொத்து விபரங்களை யாரும் எளிதில் பார்க்கும் வகையில் அரசு இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. 

    மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.
    ×